About Us
நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளை அங்கயற்கண்ணி அம்மாள் நினைவு அறக்கட்டளை (பதிவு)
அறக்கட்டளை நிறுவனர் & செயலாளர்.
ந. கணேஷ் (எ) அருணாசலம், O.N.G.C. காரைக்கால்,
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
இது வான் புகழ் வள்ளுவர் வாக்கு. இதற்கொப்ப தாம் வாழ்ந்த காலத்தில், கலைத்தாயின் மலரடிகளில் பணிபுரிந்து, புகழோடு பொலிந்து, கலை வடிவில் இன்றும் நம்மிடைப் புகழுடலொடு நிலவி வரும், நாடக சக்கரவர்த்தி நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களையும்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
என்ற, தெய்வப் புலவனின் இவ்வாக்குப்படி சிறந்த வாழ்க்கைத் துணையாகவும், ஈகையின் பிறப்பிடமாகவும் வாழ்ந்து, அருள் ஜோதியாக ஒளிவீசும் திருமதி அங்கயற்கண்ணி அம்மாள் அவர்களையும் நினைவு கூறுவதும், தமிழ் நாடகக் கலையையும், கலைஞர்களையும் செம்மைப்படுத்த வேண்டியும் துவக்கப்பட்டதே இந்த அறக்கட்டளையின் நோக்கமாகும். இந்த அறக்கட்டளையானது மதசார்பற்ற, லாப நோக்கமற்ற, அரசு சாரா தொண்டு அறக்கட்டளையாகும்.
இந்த அறக்கட்டளையின் பணிகள் தொடர்பான நிகழ்வுகள் மக்கள் பார்வைக்காக இவ்வலைதளத்தில் உள்ள வலைப்பதிவு (blog) பகுதியில் பதிவேற்றம் செய்யப்படும். நலிந்து வரும் தமிழ் நாடகக் கலையை செம்மைப்படுத்த தங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கீழ்க்கண்ட எங்கள் மின்னஞ்சல் முகவரியிலோ, அலைபேசியிலோ பகிரலாம்.
இந்த அறக்கட்டளையின் தொண்டு ‘ஆல்போல் தழைத்தோங்கிட’ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.