Gallery

நாடக சக்கரவர்த்தி நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளையின் “மதுரை தேவி பால வினோத சங்கீத சபா”  275 பேர் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய முதல் தர நாடக குழுவாகும். ஏதேனும் ஊருக்கு போய் நாடகம் நடத்த வேண்டுமென்றால் நாடக செட், உடைகள், ஏனைய நாடக பொருட்கள் மட்டும் 60 லாரிகளில் செல்லும், ரயில் பயணம் என்றால் 14 பெட்டிகள் கொண்ட விசேஷ ரயில் இவருக்காக ஒதுக்கப்படும்.

---நன்றி! தினமணி கதிர். (10/03/1998)

சென்னையில் நாடக சக்கரவர்த்தி நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளையின் சம்பூர்ண ராமாயணம் நாடகம் நடத்தப்பட்டது, அந்த இடத்திற்கு ‘ராமாயண பஸ் ஸ்டாப் என்று பஸ் நிறுத்தம் பெயர் ஏற்பட்டது, மேலும் அந்நேரத்தில் ஜெமினி S.S. வாசன் அவர்களுடைய ஔவையார் திரைப்படத்தை வெளியிட்டால் கூட்டம் வராது என கருதி அப்படத்தை சிறிது காலம் வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்தார்.

---நன்றி! எழுத்தாளர் திரு. சுதாங்கனின் ‘ஒரு பேனாவின் பயணம்’ நூல்.

நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை தன் குரு ஸ்தானத்தில் வைத்திருந்த ஸ்ரீ பரமானந்த சுவாமிகள் (நடுவில் இருப்பவர்), நவாபின் சகோதரர் திரு T.S. கோவிந்தராஜ், கலைமாமனி  திரு. T.K. கல்யாணம் மற்றும் திரு T.K. கோவிந்தன்.

ஸ்ரீ கிருஷ்ண லீலா நாடகத்தில் மேடையில் தோன்றும் பிரம்மாண்ட தேர், கம்சன் வேடத்தில் நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் வேடத்தில் நவாபின் மகள் சந்திரா காந்தி.

தமிழ்கடல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும், நாடகத் தொண்டு செய்த பக்தி சிரோன்மணி நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களும் (வடலூர் அருட்பிரகாச வள்ளலாரின் சத்திய ஞான சபை கும்பாபிஷேக கட்டுமான நன்கொடை வழங்க சென்ற போது எடுத்த புகைப்படம்).

நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் தனது உயிர் தோழரான நடிகர் கலைமாமணி திரு. K. சாரங்கபாணி அவர்களுடன்.

1962 ஆம் ஆண்டு சபரிமலை புனித யாத்திரையின் போது தனது சீடர்கள் நடிகர் திரு. M.N. நம்பியார் மற்றும் நடிகர் திரு. N.N. கண்ணப்பா அவர்களுடன் குருநாதர் நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை.

திருவனந்தபுரத்தில் திருவாங்கூர் மகாராஜா, அவரது தம்பி, அவரது தாயார் மகாராணி அவர்கள், பிரதம நீதிபதி T.M. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் ஆகியோர் நவாபின் ‘ஸ்ரீ ஐயப்பன்’ நாடகம் பார்த்தபோது எடுத்த புகைப்படம்.

நாடகம் பார்க்க வந்த திருவாங்கூர் மகாராஜாவுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்கும் நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளை.

நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளையின் குமார விஜயம் நாடகத்தை பார்த்துவிட்டு பாராட்டி, வாழ்த்திய தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளையின் சம்பூர்ண ராமாயணத்தை பார்த்துவிட்டு பாராட்டும் சிலம்புச் செல்வர் மா.பொ.சி. அவர்கள்.

நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளையின் சம்பூர்ண ராமாயணம் நாடகத்தை பார்த்துவிட்டு பாராட்டி பேசும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஆ. பக்தவச்சலம் அவர்கள். அருகில் ஆஞ்சநேயராக வேடமேற்றிருக்கும் நவாப்.

சக்திலீலா  நாடகத்தில் மும்மூர்த்திகள் சிவன், விஷ்ணு, பிரம்மா அமர்ந்திருக்கும்  தேவலோக முப்பரிமாண காட்சி. மேடைகளில் முப்பரிமாண காட்சிகளை காட்டிய முதல் நாடக குழு நவாபின் நாடகக் குழுவாகும்.

நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளையின் குமாரவிஜயம் நாடகத்தை பார்த்துவிட்டு மேடை ஏறி பாராட்டுகிறார்கள் முன்னாள் நிதி அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களும், நீதிமணி திரு. டி. எம். கிருஷ்ணசாமி ஐயர் அவர்களும், திரு. பித்துக்குளி முருகதாஸ் அவர்களும்.

நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளையின் சம்பூர்ண ராமாயணம் நாடகத்தை பார்த்துவிட்டு பாராட்டும், தமிழ் திரைப்பட பிரம்மாண்ட இயக்குனர் திரு. A.P. நாகராஜன் அவர்களும், நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்களும், சிலம்புச் செல்வர் மா.பொ.சி. அவர்களும், வாகீச கலாநிதி திரு. கி. வா. ஜெகநாதன் அவர்களும் மற்றும் நாடக ஆசிரியர், இயக்குனர், நடிகர் திரு. S.D. சுந்தரம் அவர்களும்.

டெல்லி வைஸ்ராய் வேவல் பிரபுவின் பிரதிநிதி திருவாங்கூர் வந்தபோது நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளையின் ‘ஸ்ரீ ஐயப்பன்’ நாடகத்திற்கு விஜயம் செய்து கண்டு மகிழ்ந்தார், அருகில் திவான் திரு. சர். சி.பி. ராமசாமி ஐயர் அவர்கள்.

தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் மாண்புமிகு காமராஜர் அவர்களுடன் நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளை.

தனது ‘குமார விஜயம்’ நாடகத்தை பார்க்க வந்த தேசியக்கவி திரு. நாமக்கல்ராமலிங்கம் பிள்ளை அவர்களை கம்சன் வேடத்தில் இருக்கும் நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளை வரவேற்கும் காட்சி.

பம்பாய் நாடக விழாவில் பிரபல ஹிந்தி நடிகர் திரு. பிருத்திவிராஜ் கபூர் அவர்களுடன் கம்சன் வேடத்தில் நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளை.

1955-ல் ஆவடி காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை ஏற்க வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. ஸ்ரீ தேபர் அவர்களும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களும் நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகம் பார்க்க வந்தபோது எடுத்த புகைப்படம்.

நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளையின் ஸ்ரீ கிருஷ்ண லீலா நாடகத்தை பார்த்துவிட்டு பாராட்டும் பக்ஷ்சி ராஜா ஸ்டுடியோ அதிபரும், பட தயாரிப்பாளரும், இயக்குனருமான திரு. ஸ்ரீ ராமுலு நாயுடு அவர்கள்.

நாடக சக்கரவர்த்தி நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளையை பாராட்டி பரிசு வழங்கும் இசைத்தென்றல் திரு. திருச்சி லோகநாதன் அவர்கள்.

நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளையின் ‘குமாரவிஜயம்’ நாடகத்தை பார்த்து விட்டு பாராட்டும் ரஷ்ய நாட்டு கலைஞர்கள்.

நாடக சக்கரவர்த்தி நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளை சதிராட, கலைமாமணி திரு. கே. சாரங்கபாணி அவர்கள் நட்டுவாங்கம் செய்ய, திரு நாராயண ராவ் அவர்கள் மிருதங்கம் வாசிக்க இப்படி ஒரு காட்சி நாடகத்தில் நவாப்பின் இளம் வயதில்.

சென்னை கவர்னர் ஸ்ரீ. ஸ்ரீ பிரகாசா அவர்கள், நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளையின் ‘குமார விஜயம்’ நாடகத்திற்கு தலைமை வகித்து, நாடகத்தை கண்டு களித்து பேசும் போது எடுத்த படம்.

நவாபின் ‘இயேசுநாதர்’ நாடகத்தை பார்க்க வந்த தமிழ் எழுத்தாளர் திரு மீ.பா. சோமு அவர்களுடன் பிலாத்து மன்னர் வேடத்தில் நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள்.

நாடக சக்கரவர்த்தி நவாப் T.S.ராஜமாணிக்கம் பிள்ளையிடம் மிகுந்த பற்றுக் கொண்ட மக்கள் தலைவர் திரு.G.K. மூப்பனார் ஐயா அவர்களும், சோழமண்டல தளபதி திரு. G.R.மூப்பனார் ஐயா அவர்களும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்த நவாபின் இல்லத்திற்கு வருகை தந்து பெருமை சேர்த்த நிகழ்வு.

தெய்வபக்தி,தேசபக்தி, மத நல்லிணக்கம் தீண்டாமை ஒழிப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை தம் நாடகம் வாயிலாக மக்களுக்கு உணர்த்தியது மட்டுமல்லாமல் தானும் அதன்படி வாழ்ந்துக்காட்டியும்,  இந்திய நாடக வரலாற்றில் தனக்கென்று தனி முத்திரை பதித்தும்,  தமிழ் நாடகக் கலை வடிவில்  இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடக சக்கரவர்த்தி நவாப் T.S ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களின் நினைவை போற்றி வணங்குவோம். வாழ்க தமிழ்வெல்க தமிழ் நாடகக் கலை!